சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சத வீதம் நிறைவடைந்திருந்த நிலையில் கொரோனா லொக்டவுன் காரணமாக 9 மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் திகதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அண்ணாத்த படத்தை நவம்பர் 4 ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.